மகளிர்மணி

நம்பிக்கையை இழந்து விடக்கூடாது!

DIN

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. தமிழில் "காதலர் தினம்' படத்தில் நடித்தார். சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த சோனாலி, திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாவும், இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவித்தார். இது பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 சோனாலியின் ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தித்து சமூக வலைத்தளங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இதனால் சோனாலி தனது தற்போதைய தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளி யிட்டிருப்பதோடு, சவாலான விஷயங்களை தான் சந்தித்து வருவதாகவும், ரசிகர்களின் அன்பால் தைரியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்:
 "என் வாழ்க்கையில் நிறைய சவாலான விஷயங்களை இப்போது பார்க்கிறேன். தினமும் ஒரு அனுபவத்தை சந்திக்கிறேன். எனது வாழ்க்கை பயணத்தில் இதுவும் ஒரு பகுதியாகி விட்டது. யாரும் எதற்காகவும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இந்த மாதிரி கஷ்டமான நேரத்தில் நான் தனியாக இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது. நிறைய பேர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த அவர்களுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய அன்பும், அனுபவமும் எனக்கு கூடுதல் வலிமையை தருகிறது'' என்று கூறியிருக்கிறார் சோனாலி பிந்த்ரே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT