சாப்பிடுவதற்கு முன்!
குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிட வேண்டும்.
- குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிட வேண்டும்.
- பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
- தனியாக சாப்பிடுவதற்கு பதில், பலருடன் இணைந்து சாப்பிட்டால் சாப்பாட்டின் அளவு நிச்சயம் குறையும்.
- சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவும்.
- சாப்பாட்டு வேளையில் தனிமை, மன அழுத்தம் தரும் சோக நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- பெரிய பாத்திரத்தில் சாப்பிடும் பதார்த்தங்கள் இருந்தால் எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காரணம் பெரிய பாத்திரத்தில் இருந்தால் அதிக அளவு எடுத்துச் சாப்பிடுவோம்.
- வயிறு சிரமம் கொடுத்து நெஞ்சுப் பகுதியில் வாயுவைத் தூண்டினால் வெதுவெதுப்பான வெந்நீரை அவ்வப்போது குடித்தால் வாயு வெளியேறி, வயிறு பொறுமல் குறையும்.