மகளிர்மணி

உயிரைக் காப்பாற்றிய எனது முதல் புத்தகம்!

சார்ட்டட் அக்கெüன்டன்சி' படித்து கொண்டிருந்தபோது அதில் லயிக்காமல் கதை எழுத வந்தவர்தான் சூரத் நகரைச் சவி ஷர்மா. 24 வயதாகும் சவி, தான் எழுதிய முதல் படைப்பான "ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது"

கண்ணம்மா பாரதி

சார்ட்டட் அக்கெüன்டன்சி' படித்து கொண்டிருந்தபோது அதில் லயிக்காமல் கதை எழுத வந்தவர்தான் சூரத் நகரைச் சவி ஷர்மா. 24 வயதாகும் சவி, தான் எழுதிய முதல் படைப்பான "ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது" (Everyone has a story) என்ற நாவல் வெளியிட்ட நூறு நாள்களுக்குள் ஒரு லட்சம் பிரதிகள் விற்கும் என்று கனவில்கூட சவி கற்பனை செய்து பார்க்கவில்லை. 

ஆனால் அந்த புதினத்தில் அருமையான கதைக் கருவை வாசகர்களைக் கவரும் விதத்தில் எழுதியிருப்பதாக சவி நம்பினார். அந்த நம்பிக்கையில் நாவலை தானே வெளியிட்டார். அதிர்ஷ்டம் சவி பக்கம் நின்றதால்...நாவல் மளமளவென்று விற்பனை ஆனது. 

எழுத்தாளரும் பிரசுரகர்த்தாவுமான சவி தனது எழுத்துப் பாதை குறித்து  விவரிக்கிறார்: 

""எனக்கு முன் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் தான் எனது கற்பனைக்குத் தீனி போடுகின்றன. அப்படி என்னைக் கவர்ந்த நிகழ்வுதான் எனது படிப்பை நிறுத்தச் சொல்லி நாவலை எழுத நிர்பந்தம் செய்தது. கதையை எழுத ஆரம்பித்ததும், எனது மனம் வர்த்தக கணக்கைப் பார்க்க நாடவில்லை... கதைகளைத்தான் நாடியது. படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு பேனாவை கையில் பிடித்தேன். 
முதல் நாவலை வாசகர்கள் வரவேற்றத்தால், மனசுக்குள் மத்தாப்பு விரியாமல் போகுமா என்ன? ஆமாம்! மனசுக்குள் மத்தாப்பு விரிந்தது. வாசகர்கள் ஆன்லைனிலும், முகநூல் பக்கத்திலும் பாராட்டி பதிவுகள்போட... நான் வானத்தில் பறந்தேன்... வாசகர்களின் பாராட்டுகள், கருத்துகள் என்னை இயக்க ஆரம்பித்தன. எனது கற்பனை விரிந்தாலும், அது வாசகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டுமே என்று யோசித்து யோசித்து எழுதுகிறேன். சில வாசகர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பங்கு வைக்கிறார்கள். 
வெற்றி என்பது என்னைப் பொருத்தவரையில் மகிழ்ச்சியைத் தருகிறது. திருப்தியை என்னுள் விதைக்கிறது. எழுதத் தூண்டுகிறது. ஒரு 17 வயது பையன் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தான். "விரக்தியின் விளிம்புக்குச் சென்றுவிட்ட நான் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நீங்கள் எழுதிய நாவலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நாவல் நான் வாழ்ந்தாக வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், அதற்கான காரணத்தையும் சொன்னது...நன்றி!' என்று அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்தான். ஒரு உயிரைக் காப்பாற்றிய பெருமிதம் எனது எழுத்துக்கு கிடைத்தது. இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
எனது எழுத்தில் நம்பிக்கை இருந்ததால் அந்தப் புத்தகத்தை நானே பிரசுரித்தேன். பிரசுரம் செய்ய ஆளைத் தேடியிருந்தால் நாவல் வெளிவர தாமதம் ஆகியிருக்கும். எனக்கும் காத்திருக்க நேரமில்லை. ஒரு தைரியத்துடன் நாவலை வெளியிட்டேன். சமூக வலைதளங்களில் எனது நாவல் பேசப்பட்டதால் விற்பனை விறுவிறுவென்று நடந்தது. 
எனது முதல் நாவல் நட்பு, கனவுகள், வாழ்க்கை குறித்த பதிவுகள்தான். அதில் கொஞ்சம் காதலைச் சேர்த்தேன். அதுதான் என் நாவலின் வெற்றியின் ரகசியம். 
எனது இரண்டாவது நாவலான பட்ண்ள் ஐள் சர்ற் வர்ன்ழ் நற்ர்ழ்ஹ் - தைரியம், நம்பிக்கை, சுய தேடல் இந்த மூன்றும் சேர்ந்த கலவை. விதி நமது தலையெழுத்தை எழுதுகிறது என்பார்கள். விதி எழுதியதை நாம் நினைத்தால் மாற்றி எழுதலாம் என்று கதையில் சொல்லியிருக்கிறேன். 
நாவலை எழுதத் தொடங்கும்முன் வாசகர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்...எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்கிறேன். ஒரு நாவலை முடிக்க 5 மாதங்கள் பிடிக்கும். பிறகு ஒரு மாதம் அதை வாசித்து வாசித்து செதுக்குவேன்.
புத்தக வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது உண்மைதான். வலைதளங்களின் தாக்கம், இலவசமாக கிடைக்கும் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை வாசிப்பு பழக்கத்தைக் குறைக்கின்றன. 
நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு லட்சம் பிரதி விற்பது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. 
ஆனால் நான் எழுதுவதை வாசிக்கும் வாசகர் வட்டம் பெரிதாகி வருகிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். அந்த சந்தோஷத்தில்தான் தொடர்ந்து எழுதுகிறேன். எனது எழுத்து பிரபலமாக நான் கடைப்பிடித்த வலைதள விளம்பர யுக்திகளும் ஒரு காரணம்'' என்கிறார் சவி ஷர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT