மகளிர்மணி

முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

DIN

சிலருக்கு முழங்கை, முழங்கால்களில் கருமைப் படர்ந்திருக்கும். அந்த கருமை நீங்க:
•கருமை படர்ந்திருக்கும் இடத்தில் பழுத்த எலுமிச்சைப் பழச்சாற்றை நன்றாக தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பயத்தம் மாவு போட்டுத் தேய்த்துக் கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.
•குளிக்கும் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் குளித்தால் சருமத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
•வேப்பிலையைத் தண்ணீரில் சாறு இறங்க ஊறப்போட்டுக் குளித்தால் கருமை நீங்கி மேனி பொலிவு பெறும்.
•வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
•இரவு படுக்கும் முன் புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரைமூடி எலுமிச்சம்சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவைக் கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். 
•குளிர், பனி காலங்களில் குளித்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து கை, முகம், கழுத்து போன்ற இடங்களில் தடவிவிடுங்கள். இச்செய்கையால் நாள் முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதுடன், வறட்டுத்தன்மையும் இருக்காது.
•முகம் வறண்டு பளபளப்பின்றி இருப்பதற்கு தோலுக்குரிய சத்துகள் குறைவதே காரணம். ஆகவே, தோலுக்கு சக்தியளிக்கக்கூடிய காய்கறிகள், முட்டை, பால், மீன், கீரை வகைகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
•வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை அரைத்து ஒரு சிறு உருண்டை சாப்பிட்டு வர, இளநரை மறையும்.
• வெள்ளரித் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் சாற்றினை முகம் முழுவதும் குறிப்பாக கண்களின் அடிப்பகுதிகளில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்து கடலைமாவு கொண்டு கழுவினால் கரும் புள்ளிகள் தேமல் மறையும்.
•பழுத்தப் பப்பாளி பழத்தில் ஒரு துண்டு எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்து, பயத்தமாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்து கழுவினால் வறண்ட தோலும் மினு மினுக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT