செல்லப்பிராணிகளை மிஸ் பண்றேன்!
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த "ரன்' தொடர், ஊரடங்கு அறிவிப்பினால், சட்டென்று முடித்துவிட்டனர். இந்த தொடரில் கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வந்த சாயாசிங், ஊரடங்கு குறித்து கூறியதாவது:
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த "ரன்' தொடர், ஊரடங்கு அறிவிப்பினால், சட்டென்று முடித்துவிட்டனர். இந்த தொடரில் கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வந்த சாயாசிங், ஊரடங்கு குறித்து கூறியதாவது:
""இந்த லாக்டௌனுக்கு முன்னாடி நடிப்பு, பாட்டு, டான்ஸ் என்று நாங்க ரெண்டு பேருமே பயங்கர பிஸியா இருந்தோம். பலநாள்கள் நான் சென்னைல ஷூட்ங்கில் இருந்தால், அவர் பெங்களூர் ஷூட்ல இருப்பார். இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு. படங்கள், புத்தகங்கள், யோகா, வீட்டு வேலைன்னு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி வெளியே போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது ஆரம்பத்தில் ஒண்ணும் தெரியல. ஆனால் நாள்கள் செல்ல..செல்ல.. எப்போது இந்த நிலைமை சரியாகும்னு இருக்கு.
எங்க வீட்டுல மூணு நாய்க்குட்டி வெச்சிருந்தோம். "ரன்' தொடரின் சமயத்தில் ரெண்டுபேருமே பிஸியா இருந்ததால், பெங்களூரில் உள்ள என் அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்தோம். இப்போ திரும்பக் கூட்டிட்டு வர முடியாததால், எங்கள் செல்லப் பிராணிகளை ரொம்ப மிஸ் பண்றோம்.”
"ரன்' சீரியலை இப்பவும் யூடியூப்ல தேடி திரும்பத் திரும்ப பார்க்கிற ஆடியன்ûஸயும், "ரன் 2' எப்ப வரும்?' என்று கேட்பதையும், இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டாலும், "உடனே உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்' என்று ரசிகர்கள் சொல்வதையும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.
இந்த லாக்டௌன்லாம் முடிஞ்ச பிறகு சீக்கிரமே நல்ல புராஜெக்ட்டோட ரசிகர்களை சந்திப்போம்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.