நோய்களை விரட்டும் முளைக்கட்டிய பயறு
முளைக்கட்டிய பயறில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பி12, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
முளைக்கட்டிய பயறில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பி12, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
இதில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
முளைக்கட்டிய பயறில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் செரிமானம் எளிதாக இருக்கும்.
Advertisement
புற்றுநோய் செல்களை அழித்து சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும் தன்மை கொண்டது முளைக்கட்டிய பயறு.
தானிய ஒவ்வாமையைக் குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
முளைக்கட்டிய பயறை சாப்பிடும்முறை:
பச்சையாக சாப்பிடுவது நல்லது. வேகவைத்தோ, எண்ணெய்யில் பொரித்தோ சாப்பிடக் கூடாது.
முளைக்கட்டிய பச்சை பயறை நீர் சேர்த்து அரைத்து வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை நேரத்து டிபனாக சாப்பிடலாம்.
முளைக்கட்டிய பயறை தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மேலும் வயிற்றுப் புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரை முளைக்கட்டிய பயறு குணப்படுத்தும். செலவே இல்லாமல் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முளைக்கட்டிய பயறை சாப்பிட மறக்காதீர்கள்.