முகப்பு
மகளிர்மணி

நலலதே நடககும!

அண்மையில் தமிழக அரசு விளையாட்டு பயிற்சிக் கூடங்களை திறக்க உத்தரவிட்டது குறித்து, ஸ்குவாஷ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ள ஜோஷ்னா சின்னப்பா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Updated On : 19 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:


அண்மையில் தமிழக அரசு விளையாட்டு பயிற்சிக் கூடங்களை திறக்க உத்தரவிட்டது குறித்து, ஸ்குவாஷ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ள ஜோஷ்னா சின்னப்பா மகிழ்ச்சியில் இருக்கிறார். நான்கு மாத இடைவெளிக்குப் பின் சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் மீண்டும் பயிற்சிப் பெற துவங்கியுள்ள ஜோஷ்னா, "இனியெல்லாம் நல்லதே நடக்கும்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். அடுத்து தன்னுடைய திட்டம் என்பதையும் இங்கு விவரிக்கிறார்:

""மீண்டும் அகாதெமி மற்றும் ஸ்குவாஷ் கோட்டில் பயிற்சிப் பெற அனுமதி கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. தற்போது நாங்கள் தனியாகத் தான் பயிற்சிப் பெறுகிறோம். கடந்த நான்கு மாதமாக பொதுமுடக்கம் காரணமாக அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் உடல் தகுதிப் பெற நான் அடிப்படை பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து வந்தேன்.

மாஸ்க் அணிவது, சானிடைசரை பயன்படுத்துவது போன்றவைகளை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. பொது இடங்களுக்குச் செல்லும் போது முன்னதாகவே இதுபோன்ற விஷயங்களில் பழக்கப்படுத்திக் கொள்வது நமக்கு எச்சரிக்கையாகவும், சுற்றுச் சுழலை மட்டுமின்றி நம்மையும் பாதுகாக்க உதவுமென்று கருதுகிறேன்.

Advertisement

உடல் தகுதி பெறுவதற்கும் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. என்னுடைய உடலைப் பொருத்தவரை ஏற்கெனவே விளையாடி பழக்கமானது என்றாலும், முன்னைவிட இலகுவாக புத்துணர்வுடன் விளையாட இரண்டு வாரமாவது தொடர்ந்து பயிற்சிப் பெறுவது அவசியம்.

தேவையான சக்தி பயிற்சியின் போதே கிடைத்துவிடும். இப்போதே பயிற்சிப் பெற துவங்கினால் உடல் சக்தி பெறுவதோடு சிரமமின்றி ஸ்குவாஷ் விளையாட முடியும். இதற்காக தினமும் அதிக சக்தியை செலவழிக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

ஏனெனில் அண்மையில் ஸ்குவாஷ் போட்டிகள் ஏதும் நடத்தப்படுமென்று தெரியவில்லை. இருப்பினும் போட்டியில் கலந்து கொள்ள பயணங்கள் மேற்கொள்ளும்போது முறையான பயிற்சியும், உடல் தகுதியும் தேவையல்லவா? இன்னும் சில ஆண்டுகள் புத்துணர்வுடன் என்னால் விளையாட முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த ஆண்டில் இல்லையென்றாலும், ஜனவரி முதல் போட்டிகள் துவங்கலாமென்று எதிர்பார்கிறேன். என்னைப் பொருத்தவரை காமன்வெல்த் மற்றும் ஏஷியாட் போட்டிகள்தான் எனக்கு வெற்றியைத் தேடிதந்தன.

அதனால் 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் மற்றும் ஏஷியாட் போட்டிகளில் பங்கேற்க மும்முரமாக பயிற்சிப் பெற தீர்மானித்துள்ளேன்'' என்கிறார் ஜோஷ்னா சின்னப்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.