மெனோபாஸ் நெருங்குகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை!
உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் கீரைகள் மற்றும் காய்களில், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பவை முடக்கற்றான், பிரண்டை, வாதநாராயணன் போன்றவை.
சென்றவார தொடர்ச்சி...
உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் கீரைகள் மற்றும் காய்களில், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பவை முடக்கற்றான், பிரண்டை, வாதநாராயணன் போன்றவை. இந்த மூன்று உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் சேர்த்து, வலிக்குக் காரணமாக இருக்கும் நச்சுக்களை ரத்தத்திலிருந்து சுத்தப்படுத்துவதற்கு பூண்டு, இஞ்சி, மிளகு, எலுமிச்சை போன்றவையும் சேர்ந்திருக்குமாறு உணவை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அதன்படி தயாரித்த மூன்று நாட்களுக்கான மாதிரி உணவுப்பட்டியல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் சேர்ந்து மூட்டுவலியும் இருப்பவர்களுக்கு, தோராயமாக 1500 கலோரிகள் கிடைக்குமாறு இந்த அட்டவணை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடல் எடையை அதிகப்படுத்த விரும்புவர்கள் அல்லது குறைக்க விரும்புபவர்கள், தகுந்தவாறு அதிகப்படுத்தியும், குறைத்தும் எடுத்துக் கொள்ளலாம். மூட்டு வலி மட்டுமே இருப்பவர்கள், மூட்டு வலியின் தீவிரம் குறைந்து,
Advertisement
சற்றே நிவாரணம் கிடைக்கும் நிலையில், மருத்துவரிடம் ஆலோசித்து, படிப்படியாக மருந்துகளையும் குறைத்துக்கொண்டு, தேவையான பிஸியோதெரபி சிகிச்சையுடன் உணவு முறையைத் தவறாமல் பின்பற்றினால், மூட்டுவலியிலிருந்து விடுதலை பெறலாம்.