முகப்பு
மகளிர்மணி

40  ஆண்டுகளாக தன்னந்தனியே தீவுக்குள்...

கனடா அருகே உள்ள சாப்லி (ள்ஹக்ஷப்ங்) தீவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு பெண் தனித்து வாழ்ந்து வருகிறார். 36 கி.மீ நீளம் கொண்ட இந்த தீவில் கடந்த 40 ஆண்டுகளாக ஜூயி லூகாஸ் (67) என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார்.

Updated On : 26 ஆகஸ்ட், 2020 at 12:00 AM
பகிர்:


கனடா அருகே உள்ள சாப்லி (ள்ஹக்ஷப்ங்) தீவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு பெண் தனித்து வாழ்ந்து வருகிறார். 36 கி.மீ நீளம் கொண்ட இந்த தீவில் கடந்த 40 ஆண்டுகளாக ஜூயி லூகாஸ் (67) என்ற பெண்மணி வாழ்ந்து வருகிறார். இந்த தீவில் 400 குதிரைகளும், 350 பறவை இனங்களும் உள்ளன.

தன்னை இயற்கையியலாளர் எனக் கூறிக் கொள்ளும் ஜூயி. இந்தத் தீவில் தனித்து வாழ்வதாக ஒரு எண்ணம் தமக்கு இதுவரை வந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்கு 21 வயதாகும்போது முதன்முறையாக இந்த சாப்லி தீவில் ஆராய்ச்சிக்காக வந்ததாகவும், இங்குள்ள குதிரை இனங்களை பார்த்த பின்னர் இதுவரை தமக்கிருந்த திட்டங்களை மாற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தீவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்தில் ஜூயி குடியிருந்து வருகிறார்.

Advertisement

இங்குள்ள கடற்கரையில் குவியும் குப்பைகளை இவர் தினமும் அகற்றி வருவதால் கடலில் குவியும் குப்பைகளின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று பல ஆண்டுகளாக இவர் சேகரித்து வைத்துள்ள மடிந்து போன குதிரைகளின் மண்டை ஓடுகள் விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கு உதவியாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் ஜூயியை பாராட்டியுள்ளனர்.

கனடாவின் ஹாலிபாக்ஸ் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தீவை அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் கனடாவுடன் எந்தத் தொடர்பும் இன்றி தனித்தே அமைந்துள்ளது சாப்லி தீவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.