முகப்பு
மகளிர்மணி

​பொம்​மை​க​ளைத் தேர்வு செய்ய கவ​னிக்​க ​வேண்​டி​யவை..

கு​ழந்​தை​க​ளுக்கு பொம்​மை​கள் மிக​வும் பிடிக்​கும். அதற்​காக கண்ட கண்ட பொம்​மை​களை வாங்​கிக் கொடுத்​து​வி​டக் கூடாது.

மகளிர்மணி

​பொம்​மை​க​ளைத் தேர்வு செய்ய கவ​னிக்​க ​வேண்​டி​யவை..

கு​ழந்​தை​க​ளுக்கு பொம்​மை​கள் மிக​வும் பிடிக்​கும். அதற்​காக கண்ட கண்ட பொம்​மை​களை வாங்​கிக் கொடுத்​து​வி​டக் கூடாது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

கு​ழந்​தை​க​ளுக்கு பொம்​மை​கள் மிக​வும் பிடிக்​கும். அதற்​காக கண்ட கண்ட பொம்​மை​களை வாங்​கிக் கொடுத்​து​வி​டக் கூடாது. அறிவு வளர்ச்​சிக்​கும் பொழுது போக்​கிற்​கும் பாது​காப்​பிற்​கும் ஏற்​ற​தாக பொம்​மை​கள் இருக்க வேண்​டும்.

எந்த ஒரு பொம்​மை​யும் குழந்​தை​க​ளுக்கு ஆபத்தை ஏற்​ப​டுத்​து​வ​தாக இருந்​து​வி​டக் கூடாது. கூர்​மை​யா​ன​வை​யாக, குழந்​தை​க​ளுக்கு காயத்தை ஏற்​ப​டுத்​தும் விதத்​தி​லா​ன​தாக இருந்​து​வி​டல் ஆகாது.

பிறந்து சில மாதங்​களே ஆன குழந்​தை​க​ளுக்கு அடர்த்​தி​யான வண்​ணங்​க​ளால் ஆன பொம்​மை​கள் ஏற்​றது. அவை குழந்​தை​களை அதி​கம் வசீ​க​ரிக்​கும்.

டேப் ரிக்​கார்​டர்​க​ளி​லி​ருந்து லேசாக வெளிப்​ப​டும் இசை​யை​யும் குழந்​தை​கள் ரசிக்​கும். அத​னால் இசையை வெளிப் படுத்​தும் பொம்​மை​க​ளை​யும் குழந்​தை​க​ளுக்கு வாங்​கிக் கொடுக்​க​லாம். அதே​ச​ம​யம், அந்த பொம்​மை​கள் குழந்​தை​க​ளின் செவிப் புலன்​க​ளைச் சேதப்​ப​டுத்​தும் விதத்​தில் இருக்​கக் கூடாது.

6 மாதம் முதல் 1 வயது வரை​யி​லான குழந்​தை​க​ளுக்கு கனம் குறைந்த பந்து, கப், டெலி​போன் பொம்மை போன்​ற​வை​களை விளை​யா​டு​வ​தற்​குக் கொடுக்​க​லாம்.

ஒரு வயது முதல் இரண்டு வய​தி​லான குழந்​தை​க​ளுக்கு கலர் படங்​கள் நிறைந்த புத்​த​கம். கனம் குறைந்த மரப்​பொம்மை, ஓடும் கார்​கள், சிறிய சைக்​கிள் போன்​ற​வற்றை வாங்​கிக் கொடுக்​க​லாம்.

2 வய​திற்​கும் 3 வய​திற்​கும் இடை​யி​லான குழந்​தை​க​ளுக்கு பசிள்ஸ் கட்டை​களை வாங்​கிக் கொடுத்து , அவை​க​ளைப் பொருத்​த​வும், வீடு, கட்ட​டங்​கள் உரு​வாக்​க​வும் ஆர்​வப்​ப​டுத்​த​லாம். இதன் மூலம் குழந்​தை​க​ளின் மன வளர்ச்சி அதி​க​ரிக்​கும்.

குழந்​தை​கள் பேப்​ப​ரில் பேனா மூலம் ஏதா​வது கிறுக்​கிக் கொண்​டி​ருந்​தால், அப்​ப​டியே விட்டு விடுங்​கள். குழந்​தைக்கு சிந்​தனை வளர்ந்து கொண்​டி​ருப்​ப​தாக அர்​த​தம்.

( எஸ். லட்சு​மி​வேலு எழு​திய குழந்தை வளர்ப்பு (தாய்​மார்​கள் கவ​னிக்க வேண்​டி​யவை) என்ற நூலி​லி​ருந்து )

முழு கட்டுரையைப் படிக்க →