மகளிர்மணி

பேரிக்காயின் நன்மைகள்!

பேரிக்காயிக்கு நாட்டு ஆப்பிள் என்று இன்னொரு பெயர் உண்டு. வெளித் தோற்றத்துக்குப் பச்சை காயைப் போன்று தோன்றினாலும் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தொண்டி முத்தூஸ்


பேரிக்காயிக்கு நாட்டு ஆப்பிள் என்று இன்னொரு பெயர் உண்டு. வெளித் தோற்றத்துக்குப் பச்சை காயைப் போன்று தோன்றினாலும் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

இதனை உண்பதால் கிடைக்கும் பயன்கள்: 

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துகள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. 

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் கொடுக்கும்  தாய்மார்கள், காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

பேரிக்காய் உண்பதால்,  உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும், தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும். குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT