காஜல் அகர்வாலின் தலை தீபாவளி!
""கடந்த எட்டாண்டுகளாக பழகி வந்த என்னுடைய காதலர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். எங்களுடைய காதல் திரைப்பட காதல்களை விட உன்னதமானது.
""கடந்த எட்டாண்டுகளாக பழகி வந்த என்னுடைய காதலர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். எங்களுடைய காதல் திரைப்பட காதல்களை விட உன்னதமானது. என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக முதன்முதலாக என் பெற்றோரிடம் அனுமதி கேட்டவரே கௌதம்தான். பொது முடக்கத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று முடிவெடுத்ததும் அவர்தான். திருமணத்திற்கு முன் நாங்களிருவரும் கொவைட் } 19 பரிசோதனை செய்து கொண்டோம். அதுமட்டுமல்ல, குறைந்த அளவே அழைத்திருந்த விருந்தினர்கள், பணியாளர்கள் அனைவருக்குமே பரிசோதனை செய்யப்பட்டது. எந்த பிரச்னையுமின்றி எளிமையாக திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தீபாவளி எங்களுக்கு தலை தீபாவளி என்பதால் எங்களுடைய புதிய வீட்டில் தீபாவளியை கொண்டாடியது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது'' என்கிறார் காஜல் அகர்வால்.