முகப்பு
மகளிர்மணி

விண்வெளி பெண்கள்!

ரஷியாவின் வாலென்டினா தெரஸ்கோவாதான் விண்வெளியில் பறந்த முதல் வீராங்கனை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:


ரஷியாவின் வாலென்டினா தெரஸ்கோவாதான் விண்வெளியில் பறந்த முதல் வீராங்கனை. தெரஸ் கோவாவின் அப்பா டிராக்டர் டிரைவர், அம்மா ஜவுளி தொழிற்சாலை பணியாளர். அம்மாவை போல் அவரும் ஜவுளி தொழிற்சாலையில் வேலைபார்த்துக் கொண்டே படித்தார். பாராசூட்டில் பறப்பதில் தெரஸ்கோவாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. விண்வெளி வீராங்கனையாக தெரஸ்கோவா தேர்ந்தெடுக்கப்பட அதுவும் முக்கிய காரணமாக இருந்தது. 1963-ஆம் ஆண்டில் வாஸ்டாக் 6 விண்கலத்தில் அவர் பயணம் செய்தார். கிட்டத்தட்ட 3 நாள்கள் விண்வெளியில் செலவிட்ட அவர், 48 முறை உலகை வலம் வந்தார்.

*1984- இல் கேதரின் சல்லிவன் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் ஆனார்.

*1996-ஆம் ஆண்டில் ரஷியாவின் வெளி நிலையமான மிர்ரில் 188 நாள்கள் லூசிட் செலவிட்டார். பின்னாளில் சுனிதா வில்லியம்ஸ் இந்தச் சாதனையைத் தகர்த்தார். ஆனால், லூசிட் வளர்ந்த போராட்டமான காலம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

நாசா ஊழியர்களில், தற்போது பெண்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 1981-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய 18 ஆண்டுகளில் நாசா 94 விண்கலங்களைச் செலுத்தி உள்ளது. இதில் 57 முறை பெண்கள் பயணித்துள்ளனர். 1997-க்குப் பிறகு, எல்லா விண்கலங்களிலும் குறைந்தது ஒரு விண்வெளி வீராங்கனையாவது இடம் பெற்று வந்துள்ளனர்.

*உயிரியல் பொருள் அறிவியல் எலும்பு செல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபடும் நோக்கத்துடன் 1992- இல் எண்டவர் விண்கலத்தில் மருத்துவரான மேஜெமிசன் சென்றார். விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண் அவர்.

*அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் எலீன் காலின்ஸ், 1995- இல் நாசா விண்கல விமானிகளில் ஒருவராக மாறினார். அவரே முதல் பெண் விண்கல விமானி.

முழு கட்டுரையைப் படிக்க →