முகப்பு
மகளிர்மணி

கழுத்தில் உள்ள கருமை போக்க..

கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் அணிவதாலும்  சிலருக்கு கழுத்தில் கருமையாகிவிடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:


கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் அணிவதாலும்  சிலருக்கு கழுத்தில் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை சோப்பு கொண்டு போக்குவது கடினம். எனவே  சில இயற்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி கழுத்தில் உள்ள கருமையை போக்கிக் கொள்ளலாம்:

எலுமிச்சை சாறு 

பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.

வெள்ளரிக்காய் 

வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்

பேக்கிங் சோடா 

4-5 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை, 1 தேக்கரண்டி நீருடன் கலந்து விழுது போன்று செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் வெளியேற்றப்படும்.

தேன் 

1/2 தேக்கரண்டி  பட்டை பொடியில், 1 தேக்கரண்டி தேன் கலந்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, தழும்புகள் இருந்தாலும் மறைந்து விடும்.

ஆரஞ்சு தோல் 

ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். மேலும் இது சிறந்த ஸ்கரப்பரும் கூட. எனவே சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி 

தக்காளியைச் சாறு எடுத்து, அதனை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைந்துவிடும்.

ஆப்பிள் சீடர் மற்றும் வினிகர்

ஆப்பிள் சீடர் மற்றும் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, காட்டனை பயன்படுத்தி கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமை மறையும்.

இளநீர்

இளநீர் கூட கழுத்து கருமையை மறைக்க உதவும். இளநீரை கழுத்தில் தினமும் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மட்டுமல்லாமல், தழும்புகளும் மறையும்.

முழு கட்டுரையைப் படிக்க →