முகப்பு
மகளிர்மணி

பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்!

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பல்வேறு சமூக அமைப்புகள் உதவி வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:


தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பல்வேறு சமூக அமைப்புகள் உதவி வருகின்றன. அந்த வரிசையில் இப்போது தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் வரலெட்சுமி சரத்குமார். பெண்ணுரிமை, பெண் குழந்தைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர். சாத்தான்குளம் விவகாரமாக இருந்தாலும் சரி அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரமாக இருந்தாலும் சரி மனதில் தோன்றியதை தைரியமாகப் பேசக்கூடியவர். பெண்களுக்கு உதவும் வகையில் சேவ் சக்தி (ள்ஹஸ்ங் ள்ட்ஹந்ற்ட்ண்) அமைப்பையும் நடத்தி வருகிறார்.

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (நஹஸ்ங் நட்ஹந்ற்ண்) பவுண்டேஷன் சார்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் எண்ணம் உருவானது எப்படி என்று கேட்டதற்கு சொன்னார்:

""பெண்களுக்குப் பிரச்னை என்றால் அதில் என்னுடைய குரலும் ஒலிக்கும். அந்த வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய அம்மா சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டோம். கரோனாவை பொருத்தவரை மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அரசை நாம் குற்றம் சொல்லக்கூடாது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினால் நாம் கரோனாவிலிருந்து தப்பிக்கலாம்'' என்றார் வரலெட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.