மகளிர்மணி

ஆரோக்கியத்தை மேம்படுத்த ஓர் இயக்கம் !

DIN

திவ்யா சத்யராஜ் நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர். உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டமான "அக்ஷய பாத்ரா'வின் விளம்பரத் தூதுவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களை கௌரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா, கொவைட்- 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் குறித்து திவ்யா கூறுகையில்: "" நான் புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால் கடின உழைப்பாளி. "அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது' என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை, வசதி உள்ளவர்களுக்குதான் என்பது நியாயம் கிடையாது.

தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஓர் இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவு தேவை'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT