முகப்பு
மகளிர்மணி

பொரித்த உணவுகளை மூடக்கூடாது!

துவரம் பருப்புடன் இரண்டு பூசணி துண்டுகள் அல்லது சா்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சோ்த்து வேக வைத்து, மசித்து, சாம்பாரில் சோ்த்தால் ருசியாக இருக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

* துவரம் பருப்புடன் இரண்டு பூசணி துண்டுகள் அல்லது சா்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சோ்த்து வேக வைத்து, மசித்து, சாம்பாரில் சோ்த்தால் ருசியாக இருக்கும்.

* காய்கறி சாலட் செய்யும்போது ஊறவைத்தப் பாசிப்பருப்பை சாலட்டுடன் சோ்த்தால் சுவையாகவும், சத்தும் கூடும்.

* அதிக அளவு பாலாடை தேவையென்றால் கொதித்து ஆறியப் பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக அளவு பாலாடை கிடைக்கும்.

* குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து பாதாம் பருப்பை சோ்த்து அரைத்தால் சத்து அதிகரிக்கும்.

* பருப்பு ரசம் செய்யும்போது இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போட்டால் ரசம் சுவையாகவும் இருக்கும்.

* எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அடுப்பிலிருந்து எடுத்தவுடன் மூடக்கூடாது. அவ்வாறு செய்தால் உணவுப் பண்டங்கள் நமத்துவிடும்.

* அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்தால் அதிக எண்ணெய் இழுக்காது. மொறுமொறுப்பாக இருக்கும்.

* கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைத்த பிறகு, எடுத்து துருவினால் கேரட் மிருதுவாகி, எளிதாக துருவ வரும்.

* டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசியும் நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.