மகளிர்மணி

வெப்சீரிஸில் சானியா!

ரிஷி

பெண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்கள், பாலியல் தொந்தரவு, கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜனவரியில் "எம்டிவி நிஷேத்' என்ற வெப்சீரிஸ் தொடர் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து, அந்தத் தொடரின் 2-ஆம் பகுதியை உருவாக்க இதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு "எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்' என்று தலைப்பிட்டுள்ளனர். காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தத் தொடரின் மையக் கரு. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக நடிக்கவுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ""நம் நாட்டில் இருக்கும் கொடிய நோய்களில் காசநோயும் ஒன்று. இந்தக் காசநோய் தற்போது கரோனாவால் இன்னும் மோசமடைந்துள்ளது. மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களே இருக்கின்றனர். எனவே, காசநோய் குறித்த கருத்துகளை மாற்றுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிக அவசரத் தேவையாக உள்ளது.
இந்நிலையில், "எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்' தொடர் இதனை அழுத்தமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொல்கிறது. இதுபோன்ற ஒரு நல்ல பதிவில் செல்வாக்குமிக்க இடத்தில் இருக்கும் ஒருவர் என்ற வகையில், மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எனது பங்களிப்பும் உதவும் என்று நம்புகிறேன்'' என்றார். இந்தத் தொடர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT