முகப்பு
மகளிர்மணி

டிப்ஸ்...

கோதுமை, கம்பு, கேழ்வரகு  ஆகியவற்றின் மாவு புழுங்கலரிசி  மாவையும் சேர்த்து வறுத்து  வைத்துக் கொண்டால்  சுலபமாக  புட்டு  செய்து விடலாம். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

கோதுமை, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் மாவு புழுங்கலரிசி மாவையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொண்டால் சுலபமாக புட்டு செய்து விடலாம்.

அவியல் செய்யும்பொழுது அதில்விட தேங்காய் எண்ணெய் இல்லாவிட்டால் தேங்காய் அரைக்கும்பொழுது அதனுடன் நான்கு முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்தால் சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

வெண்டைக்காயை சமைப்பதற்கு முன் அதில் சிறிது எலுமிச்சைச் சாறு தெளித்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சுவையாக இருக்கும்.

முதல்நாள் மீதமான சப்பாத்திகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி குக்கருக்குள் வைத்து வெயிட் போடாமல் இரண்டு நிமிடம் வேக வைத்தால் சப்பாத்தி புதிதாக செய்தது போல் இருக்கும்.

ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த பச்சரிசியுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய்த் துருவல், ஒரு டேபிள் கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால், ஆப்பம் மிகவும் மிருதுவாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டித் தூளைத் தூவினால் கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

* தேங்காய் சாதம், எலுமிச்சைச்சாதம் போன்ற கலந்த சாதங்கள் செய்யும்போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்துப் போட்டுக் கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஒரு கப் கெட்டி அவல், இரண்டு கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து ஊற்றினால் பிரமாதமான சுவையான தோசை தயார்.

மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சிறிது நெய்யில் வதக்கி துவையல் செய்தால் ருசியாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →