முகப்பு
மகளிர்மணி

வேப்பம் பூ -  மாங்காய் பச்சடி 

முதலில் மாங்காயை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, பின் விரல் நீளத்திற்கு சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:


தேவையானவை: 

மாங்காய் - 250 கிராம்
வெல்லம் - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
வேப்பம்பூ (காய்ந்தது) - சிறிதளவு
உப்பு - சிறிதளவு   

செய்முறை:

Advertisement

முதலில் மாங்காயை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, பின் விரல் நீளத்திற்கு சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். வெல்லத்தை சுடுநீரில் கரைத்து, தூசியின்றி வடிகட்டிக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில், 2 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,  உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை அதில் போட்டு தாளிக்க வேண்டும். அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். பிறகு வெள்ளக்கரைசலை அதில் ஊற்றி சிறிது நேரம் வேக விடவும். நன்கு கொதித்து வந்த பிறகு காய்ந்த வேப்பம்பூக்களைப் போட்டு இறக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments