மகளிர்மணி

காய்கறி சூப் 

வாணலியில் வெண்ணெய்யை சூடாக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும்.

அமுதா அசோக் ராஜா

தேவையானவை: 

பீன்ஸ் - 10
கேரட் - ஒன்று
கோஸ் - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - ஒரு பல்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மைதா மாவு (அ) சோள மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
பால் - ஒரு டம்ளர்
நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் வெண்ணெய்யை சூடாக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஏற்படும் "கேந்திர திருஷ்டி யோகம்": எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

அறிமுக போட்டியில் இரட்டைச் சதமடித்த எம்பிஏ மாணவர்..! கோலியுடன் முதல் போட்டிக்கான வாய்ப்பை இழந்தவர்!

தீபாவளிக்கு ஆன்லைனில் பொருள் வாங்குவோர் எச்சரிக்கை! இப்படியும் நடக்கிறது

மதுரை மாநகராட்சி அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 5 கோடி, 1.5 கிலோ தங்கம், சொகுசுக் கார்கள் பறிமுதல்! திடுக்கிடும் தகவல்...

SCROLL FOR NEXT