மகளிர்மணி

 பாகற்காய்  துவையல் 

விதையை நீக்கி பாகற்காயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

இல.வள்ளிமயில்


தேவையானவை:

பாகற்காய் - 150 கிராம்
உளுந்து - 2 தேக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
புளி மற்றும் வெல்லம் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

விதையை நீக்கி பாகற்காயை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். பின், பாகற்காயை சேர்த்து வதக்கி ஆற விடவும். வதக்கிய பொருட்களுடன் புளி, வெல்லம் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாக அரைக்கவும். அத்துடன் கடுகு. உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, ஆகியவற்றைத் தாளித்து சேர்த்து தட்டில் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT