மாங்காய் தோல் துவையல்
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், உளுந்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேவையானவை:
மாங்காய்த்தோல் சீவி துருவியது - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
உளுந்து - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பற்கள்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு, உளுந்து - தலா 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், உளுந்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய்த் துருவல், மாங்காய் துருவல், உப்பு, சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய பொருட்களை ஆறவிட்டு, தண்ணீர் தெளித்து அரைக்கவும். பிறகு கடுகு, உடைத்த உளுந்து, பெருங்காயத் தூளைத் தாளித்து, அரைத்த விழுதுடன் கலந்து பரிமாறவும். உளுந்துக்கு பதில் சின்ன வெங்காயம் சேர்க்கலாம்.