கோல்டன் விசா!
தமிழகத்தின் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பேகம். ஆயுர்வேத மருத்துவரான இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் துபாயில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
தமிழகத்தின் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பேகம். ஆயுர்வேத மருத்துவரான இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் துபாயில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, துபாய ஆயுஷ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக நஸ்ரின் பேகம் பணியில் உள்ளார்.
இந்நிலையில், நஸ்ரினுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவிக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது. சிறந்த முதலீட்டாளர்கள், தங்கள் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள், தொழிலதிபர்களுக்கு இந்த விசாவை வழங்கி அந்நாடு கெளரவிக்கிறது. அமீரகத்தின் குடிமக்களுக்கு ஒப்பாக இந்த விசாவை வைத்திருப்பவர்கள் கருதப்படுவார்கள். இந்திய நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.