முகப்பு
மகளிர்மணி

உலகின் சிறந்த மாணவி!

இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 11 வயது சிறுமி நடாஷா பெரியை உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட், 2021 at 12:00 AM
பகிர்:


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமி நடாஷா பெரியை உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவின் கல்வி ஊக்கத் தொகை தகுதித் தேர்வு (சாட்) மற்றும் அமெரிக்க கல்லூரி நுழைவுத் தேர்வு ( ஆக்ட்) ஆகிய தேர்வுகளில் நடாஷா பெரி வெளிப்படுத்தியுள்ள திறமையை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

நியூ ஜெர்ஸியிலுள்ள பள்ளியில் படித்து வரும் நடாஷா, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 2020-2021 இளம் திறமையாளர்கள் தேடல் மையத்தில் பதிவு செய்திருந்த சுமார் 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவராவர்.

Advertisement

5 -ஆம் வகுப்பு படித்து வந்தாலும் தகுதித் தேர்வுகளில் அவர், அளித்த பதில் 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இணையான திறன் கொண்டதாக இருந்தது.

அமெரிக்காவில் கல்லூரியில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் சாட் அல்லது ஆக்ட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.