சுபத்ராகுமாரி சவுஹான்
சுபத்ராகுமாரி சவுஹான் ஒரு இந்தியக் கவிஞர், ஹிந்தி மொழியில் பல கவிதைகளை இயற்றியவர்.
மகளிர்மணிசுபத்ராகுமாரி சவுஹான்
சுபத்ராகுமாரி சவுஹான் ஒரு இந்தியக் கவிஞர், ஹிந்தி மொழியில் பல கவிதைகளை இயற்றியவர்.
சுபத்ராகுமாரி சவுஹான் ஒரு இந்தியக் கவிஞர், ஹிந்தி மொழியில் பல கவிதைகளை இயற்றியவர். குறிப்பாக ஒன்பது ரசங்களில் ஒன்றான வீர ரசத்தில் பல கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றவர். இவருடைய புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்று "ஜான்சி கி ராணி' (ஜான்சி ராணியின் வீரத்தை குறித்தது) ஆகும்.
இவர் உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள நிஹல்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவர் முதலில் அலகாபாத் நகரில் உள்ள கிராஸ்வொயிட் பெண்கள் பள்ளியில் படித்து 1919- ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு காந்வாவைச் சேர்ந்த தாக்குர் லட்சுமண சிங் செளஹானைத் திருமணம் செய்தபின் ஜபல்பூரிக்கு குடிபெயர்ந்தார்.
1921-ஆம் ஆண்டு சுபத்ரா குமாரியும் இவரது கணவரும், காந்திஜி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். சுபத்ரா குமாரிதான் நாக்பூர் நகரில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண்மணி ஆவார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு 1923- ஆம் ஆண்டும், 1942- ஆம் ஆண்டும் இருமுறைச் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சுபத்ராகுமாரி
ஹிந்தியில் பல கவிதைகளை இயற்றியுள்ளார். ராணி லட்சுமிபாயின் வீரம் குறித்து உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட "ஜான்சி - கி - ராணி' என்னும் கவிதை இவரால் எழுதப்பட்டவைகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ஹிந்தி இலக்கியத்தில் அதிகமாக வாசிக்கப்பட்டதும் பாடப்பட்டதுமான கவிதைகளில் இது தலையானது ஆகும்.
1857 சிப்பாய் கலகத்தில் ஜான்சி ராணியின் பங்களிப்பையும் உணர்ச்சிகரமாக இப்படைப்பு சித்தரிக்கும். இவரது கவிதை பல இந்தியப் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. சுபத்ரா
குமாரி மராட்டிய மாநிலத்தில் சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய கடற்படைக் கப்பல் ஒன்றுக்கு இவரது நினைவாக ஐஎஎந சுபத்ராகுமாரி சவுஹான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு ஜபல்புரி நகரில் இவர் நினைவாக இவரின் சிலையை வைத்துள்ளது. 1976 - ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 -ஆம் நாள் இந்திய அஞ்சல் துறை இவரின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.