மகளிர்மணி

ப்ரோக்கோலி  பாசிப்பருப்பு  கூட்டு 

வாணலியில் பாசிப்பருப்பை இட்டு, தேவையான அளவு நீர்விட்டு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, ப்ரோக்கோலி, வெங்காயம், மிளகாய் இவைகளை நறுக்கிக் கொள்ளவும்.

ராதிகா அழகப்பன்


தேவையானவை:

ப்ரோக்கோலி - 1
பாசிப்பருப்பு - 150 கிராம்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 2
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
சீரகம் - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:

வாணலியில் பாசிப்பருப்பை இட்டு, தேவையான அளவு நீர்விட்டு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, ப்ரோக்கோலி, வெங்காயம், மிளகாய் இவைகளை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், சீரகம், மிளகு சேர்த்து கரகரவென அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய ப்ரோக்கோலி, தக்காளி, வெங்காயம், மிளகாய் இவைகளைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், இத்துடன் அரைத்த மசாலா விழுது, வேக வைக்க பாசிப்பருப்பு இவைகளை இட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, போதிய அளவு நீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். ப்ரோக்கோலி, பாசிப் பருப்பு கூட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT