முகப்பு
மகளிர்மணி

காலிஃப்ளவர் அடை 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி தேங்காய், மிளகாய் வற்றலைச் சேர்த்துக் கெட்டியாகச் சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும்.

Updated On : 15 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:

தேவையானவை:

காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 3
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
மைதாமாவு - 1 கரண்டி
கோதுமை மாவு - 2 கரண்டி
ரவை - 2 கரண்டி
தயிர் - 1 கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

Advertisement

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி தேங்காய், மிளகாய் வற்றலைச் சேர்த்துக் கெட்டியாகச் சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். சீரகத்தைக் கரகரப்பாகத் தூள் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, கோதுமை மாவு, பொடித்த காலிஃப்ளவர், ரவை, சீரகத்தூள், உப்பு, சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடைமாவு பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். அடுப்பில் அடைக்கல்லைப் போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு அடைமாவை பரவலாக ஊற்றி மேலே இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யைச் சுற்றிலும்விட்டு நன்றாகச் சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.