முகப்பு
மகளிர்மணி

காலிஃப்ளவர்  மசாலா 

தக்காளி, வெங்காயம், காலிஃப்ளவர் இவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 5:30 PM
பகிர்:


தேவையானவை:

காலிஃப்ளவர் - 250 கிராம்
தேங்காய் - அரை மூடி
இஞ்சி, பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
கிராம்பு - 1
மிளகாய்வற்றல் - 6
பூண்டு - 4 பல்
கசகசா - 2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
முந்திரிப் பருப்பு - 10
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

Advertisement

தக்காளி, வெங்காயம், காலிஃப்ளவர் இவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய், சோம்பு, கசகசா , தேங்காய் எல்லாவற்றையும் அரைத்து கடைசியில் முந்திரியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பின் காலிஃப்ளவர் வரையும் போட்டு வதக்க வேண்டும். உப்பு, சேர்த்து நன்றாக வெந்ததும் அரைத்த மசாலாவையும் போட்டு கிளறி நன்றாகக் கொதி வந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லி நறுக்கி தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.