மகளிர்மணி

சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? 

கவிதா பாலாஜி

பொதுவாக பனிக்காலம் துவங்கி விட்டால் அதிக சரும பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். குறிப்பாக பனி காலத்தில் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியின் காரணமாக வறண்டு பொலிவிழந்து காணப்படும். இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது  பார்ப்போம்:

வறட்சியான சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் சிறிது நேரம் தடவி, மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தன்மை, மாறி சருமம் பொலிவுடன் வைத்துக்கொள்ள பெரிதும்  உதவுகிறது.

நன்றாக கனிந்த பப்பாளியை எடுத்து கொள்ளவும். அவற்றை நன்றாக மசித்து கொள்ளவும், இந்த மசித்த பப்பாளியை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் சரும வறட்சி மாறி முகம் எப்போது ஜொலிப்பாகவே இருக்கும்.

ஒரு அவகோடா பழத்தை எடுத்து கொள்ளவும், அவற்றை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் வரை காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்னை சரியாகும்.

சரும வறட்சியால் தினமும் பாதிக்கப்படுபவர்கள் வேப்பெண்ணெய்யை கைகால்கள் மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் சரும வறட்சி மறைந்து போய்விடும்.

ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் சுடவைத்து, பின்பு அந்த எண்ணெயை உடல் மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் வரை காத்திருந்து, பின்பு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளித்து வரவும். இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் வறட்சியை விரட்டி அடிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT