எக்லெஸ் கேக்
முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரைப் பொடி மற்றும் கால் கிண்ணம் வெண்ணெய்ச் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக்
தேவையானவை:
மைதா - 1 கிண்ணம்
கன்டென்ஸ்டு மில்க் - அரை கிண்ணம்
சர்க்கரைப் பொடி - கால் கிண்ணம்
முந்திரி - 1 தேக்கரண்டி
உலர் திராட்சை - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - கால் கிண்ணம்
பால் - அரை டம்ளர்
உப்பு - 1 கிண்ணம்
செய்முறை:
முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரைப் பொடி மற்றும் கால் கிண்ணம் வெண்ணெய்ச் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பெளலில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் கால் கிண்ணம் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும். உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கன்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பேக்கிங் பெளலில் 1 தேக்கரண்டி வெண்ணெய் தடவி, பின் 1 தேக்கரண்டி மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
பிறகு கேக் வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பெளலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும். இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், எக்லெஸ் கேக் ரெடி.