மகளிர்மணி

கொப்பரை சாக்லேட் 

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நீர்விட்டு சர்க்கரையைப் போட்டு கரைய விடவும்.

எஸ்.பிரியம்வதா சென்னை.

தேவையானவை:

கொப்பரைத் துருவல் - 1 கிண்ணம் (வறுத்துப் பொடித்தது)
முந்திரி பொடித்தது - கால் கிண்ணம்
வேர்க்கடலை - கால் கிண்ணம் (வறுத்துப் பொடித்தது)
பால்பவுடர் - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
கோக்கோ பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நீர்விட்டு சர்க்கரையைப் போட்டு கரைய விடவும். நன்கு கொதித்துப் பாகு பதம் வரும் முன்பே பொடித்த கொப்பரைத் துருவல், முந்திரி, வேர்க்கடலை பொடி, பால்பவுடர், கோக்கோ சேர்த்து கிளறவும். (கொப்பரைத் துருவலை தேவையானால் நெய்யில் பச்சை வாசனைப் போகும் வரை வதக்கி போடலாம்). பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரவ செய்து தேவையான வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். மிகவும் சுவையான ஆரோக்கியமான ஸ்வீட் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT