மகளிர்மணி

பூசணிக்காய் ரசவாங்கி

ஆர். ஜெயலட்சுமி

பூசணிக்காய் ரசவாங்கி
 

தேவையானவை:

பூசணிக்காய் - சிறியது 1
மிளகாய் வற்றல் - 5
தனியா - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 50 கிராம்
புளி - 1 உருண்டை
தேங்காய் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையானவை
கடுகு - 1தேக்கரண்டி

செய்முறை:

பூசணிக்காயை தோல் சீவி உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மசாலா சாமான்களை எண்ணெய்விட்டு வறுத்து அரைக்கவும். கடலைப் பருப்பை ஊற வைத்து எண்ணெய்விட்டு வறுக்கவும். புளி, தேங்காய், உப்பு வறுத்த மசாலா சாமான்களை மைபோல அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து, கரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும், கடுகு கறிவேப்பிலையை தாளித்து கரைத்த விழுதைக் கொட்டி, கொதித்ததும் பூசணித் துண்டுகள், வறுத்த கடலைப் பருப்பைப் போட்டு, பொங்கி வரும்போது கீழே இறக்கி வைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT