முகப்பு
மகளிர்மணி

ராணியின் ரகசியம்!

ஒரு நாட்டை 68 ஆண்டுகளைத் தாண்டியும் ஒரு பெண்ணால் ஆள முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சிங்கப்பெண் இங்கிலாந்து ராணி எலிசபெத்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

ஒரு நாட்டை 68 ஆண்டுகளைத் தாண்டியும் ஒரு பெண்ணால் ஆள முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சிங்கப்பெண் இங்கிலாந்து ராணி எலிசபெத். இவருக்கு தற்போது 94 வயதாகிறது ஆனாலும் நடை, உடை பாவனையில் சற்றும் அவரது கம்பீரம் குறையவில்லை.

10 வயதில் குதிரையேற்றம் பயின்ற எலிசபெத், இங்கிலாந்தின் குதிரைப் படையிலும் பணியாற்றியுள்ளார். இப்போதும் குதிரை சவாரி செய்கிறார். 1947-இல் இளவரசர் பிலிப்பை மணந்து கொண்டார்.

ராணி எலிசபெத்தின் 68 ஆண்டுகால ஆட்சியில் அன்றைய வின்ஸ்டன் சர்ச்சில் முதல் இன்றைய போரிஸ் ஜான்சன் வரை 15 பிரிட்டன் பிரதமர்களைக் கண்டுள்ளார். இவருக்கு உலகளவில் 23 மெழுகுச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எலிசபெத் ராணி இந்தியாவுக்கு மூன்று முறை வந்திருக்கிறார். கடைசியாக 1997 -இல் வந்துள்ளார்.

ராணி இப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் ரகசியம் என்ன?

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது.
தகுந்த எடையைப் பராமரிப்பது.
சத்தான சமச்சீர் உணவுகளை உட்கொள்வது.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மக்களோடு தொடர்பில் இருப்பது.
சமூகப் பணிகளில் ஈடுபடுவது.

முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.