முகப்பு
மகளிர்மணி

பலாக்கொட்டை  வடை

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.

Updated On : 28 ஜூலை, 2021 at 4:18 PM
பகிர்:

தேவையானவை:

பலாக் கொட்டை - 20
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
கடலைமாவு - 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - 1 பிடி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

Advertisement

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றை பொடியாக நறுக்க வேண்டும். பலாக் கொட்டையை வேக வைத்து தோலூரித்து மசித்து நறுக்கியதோடு சேர்த்து அரைத்து கடலைமாவுடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.