மகளிர்மணி

மூலிகை தேநீர் 

மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து அரைத்து

தினமணி

தேவையானவை:

காய்ந்த துளசி இலை, 
காய்ந்த புதினா இலை - தலா ஒரு கைப்பிடியளவு
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - 5
மிளகு - ஒரு தேக்கரண்டி
அதிமதுரப்பொடி - ஒரு தேக்கரண்டி
சுக்குத்தூள் - ஒரு தேக்கரண்டி
திப்பிலி - 5
ஜாதிக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை:

மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக் கொள்ளவும். பின்னர்,  தேவைப்படும்  போது, ஒரு பாத்திரத்தில் ஒரு  டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, அரைத்தத்தூள் ஒரு தேக்கரண்டி, தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தலாம்.

குறிப்பு: விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

பயன்: சுவாச கோளாறு சரி செய்யும் தன்மைக் கொண்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT