முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  "மௌன ராகம் - சீசன் 2'  தொடரில்  நாயகியாக  நடித்து வருபவர் ரவீனா தாஹா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
பகிர்:

பெரியதிரைதான் இலக்கு!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மௌன ராகம் - சீசன் 2' தொடரில் நாயகியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. இவர், சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தற்போது, "மௌன ராகம்' தொடரின் மூலம் சின்னத்திரை நாயகியாகி இருக்கிறார். இது குறித்து அவர், பகிர்ந்து கொண்டவை:

சிறு வயது முதலே எனக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. எனது அம்மாவுக்கும் அதில் விருப்பம் இருந்தது. எனவே, சிறு வயதிலேயே என்னை நடனப்பள்ளியில் சேர்த்து விட்டார். எனது 4 -ஆவது வயதில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மேடையில் நடனம் ஆடியது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

இதற்கிடையில் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைக்க, அப்போதே நடிப்புதான் எனது வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன்.

அதன்பின்னர், பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, "ராட்சசன்', "ஜில்லா', "கதை சொல்ல போறோம்', ஜீவா என பல திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன்.

அதைத் தொடர்ந்து விளம்பர படங்களிலும் நடிக்கத் தொடங்கினேன். தற்போது, சின்னத்திரையில் நாயகியாக நடித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இருந்தாலும், எனது இலக்கு பெரியதிரைதான். பெரியதிரையில் நல்ல கதைகளில் நடித்து பெயர் பெற்றால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும் என்பது என் எண்ணம். எனவே, அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன் ''என்றார்.

ஸ்டைலுக்காகவேரசிகர்களை கவர்ந்தவர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "யாரடி நீ மோகினி' தொடரில் வில்லி ஸ்வேதா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சைத்ரா ரெட்டி.

இவர், விஜய் டிவியின் "கல்யாணம் முதல் காதல் வரை' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர், கன்னட திரைத்துறையில் பல படங்களில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். அங்கே வாய்ப்புகள் குறைய, தெலுங்கு தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்மூலம் தற்போது தமிழுக்கு வந்து தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தொடரில் சைத்ரா அணிந்து வரும் ஆடை அலங்காரம் மற்றும் ஸ்டைலுக்காகவே தனி ரசிகர்கள் உண்டு.

இவர், சமீபத்தில்தான் கன்னடத் திரைத்துறையைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது, பொதுமுடக்க விடுமுறையில் இருப்பதால், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வர, அது அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.