மகளிர்மணி

 சத்துமாவு அடை 

தினமணி

தேவையானவை :
பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு,
உளுத்தம் பருப்பு - தலா 1கிண்ணம்
கொள்ளு - 1 கிண்ணம்
சோயா - 1 கிண்ணம்
வரமிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை : வெங்காயம், கொத்துமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பார்லி, ராஜ்மா, பாசிப்பருப்பு, கொள்ளு, சோயா அனைத்தையும் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பொருள்களுடன் மிளகாய், 
சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலையையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான சத்து மாவு அடை ரெடி. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருமைப்பட வேண்டிய தருணம் -பிரக்ஞானந்தாவுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும்: யூனிஸ் கான்

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

SCROLL FOR NEXT