தேவையானவை: 
பால் -  2  டம்ளர்
சர்க்கரை  -  2 தேக்கரண்டி
கிராம்பு  -  1
மிளகு  - 1  தேக்கரண்டி
மஞ்சள்பொடி  -  1 சிட்டிகை
செய்முறை:  
மிளகு,  கிராம்பை லேசாக  வறுத்து ஆறியதும்  கரகரப்பாக  பொடிக்கவும்.  பின்னர்,  பாலில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து  கொதிக்கவிடவும்.  
பால் கொதித்து வந்ததும்   அத்துடன் பொடித்து வைத்துள்ள  பொடியைச் சேர்த்து நன்கு காய்ச்சி ஒன்றரை டம்ளராக  வற்றவிடவும்.
பின்னர்,  சர்க்கரை,  மஞ்சள் பொடி  சேர்த்து வடிகட்டி சூடாக  குடிக்கவும்.  சுடச்சுட மிளகுப் பால் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.