காய்கறி ஊறுகாய்
காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்
தேவையானவை :
நறுக்கிய கேரட் , பீன்ஸ்
பஜ்ஜி மிளகாய், பெங்களூர் கத்திரிக்காய் - தலா கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 100 கிராம்
எலுமிச்சைச் சாறு - கால் டம்ளர்
வினிகர் - கால் கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
Advertisement
Advertisement
காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் எலுமிச்சைச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும். காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் பயன்படுத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.