முகப்பு
மகளிர்மணி

சேனைக் கிழங்கு மிக்சர் 

சேனைக் கிழங்கை தோல் சீவி, சதுரமாக வெட்டி கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பாதி வேக வைத்து  பின் அரிசி மாவு, மிளகாய்தூள் சேர்த்துப் பிசறவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சேனைக் கிழங்கு மிக்சர் 

தேவையானவை:
சேனைக் கிழங்கு -  250 கிராம்
எண்ணெய் -  200 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது

செய்முறை:

சேனைக் கிழங்கை தோல் சீவி, சதுரமாக வெட்டி கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பாதி வேக வைத்து  பின் அரிசி மாவு, மிளகாய்தூள் சேர்த்துப் பிசறவும். பின் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். இதனுடன் எண்ணெய்யில் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை பெருங்காயத் தூள் கலந்து பரிமாறவும். இது நல்ல மொறு மொறு மாலை நேர ஸ்நாக்ஸ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல இணை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.