முகப்பு
மகளிர்மணி

சேனைக்கிழங்கு வேர்க்கடலை சட்னி 

சேனைக்கிழங்கு  நன்கு கழுவி, தோல் சீவி  வதக்கி தனியே வைக்கவும். வேர்க்கடலை  வறுத்து  தோல் நீக்கி தனியே வைக்கவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தேவையானவை:

சேனை கிழங்கு - 50 கிராம்
வேர்க்கடலை  -  25  கிராம்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
தாளிக்க:
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது

செய்முறை:  

சேனைக்கிழங்கு  நன்கு கழுவி, தோல் சீவி  வதக்கி தனியே வைக்கவும். வேர்க்கடலை  வறுத்து  தோல் நீக்கி தனியே வைக்கவும். ஆறிய பின் சேனைக் கிழங்கு, வேர்க்கடலை மற்றும் தேங்காய்த் துருவல் பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,  கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த  கலவையில் சேர்த்து, கிளறி இறக்கவும்.  இட்லி , தோசைக்கு  தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.