முகப்பு
மகளிர்மணி

புதுவடிவமைப்பில் வல்லவர்!

கல்யாணத்திற்கு  வாங்கும் பட்டுப் புடவையைக் கூட அணிவது தற்போது அபூர்வமாய் இருக்கும் சூழ்நிலையில், பட்டுப் புடவைகளை   தொடர்ந்து  கட்டாவிட்டால்  அவை பாழாகிவிடும்.

Updated On : 24 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:

கல்யாணத்திற்கு வாங்கும் பட்டுப் புடவையைக் கூட அணிவது தற்போது அபூர்வமாய் இருக்கும் சூழ்நிலையில், பட்டுப் புடவைகளை தொடர்ந்து கட்டாவிட்டால் அவை பாழாகிவிடும். அவ்வாறு பாழாகிவிட்டால் பின்னர் அவற்றை என்ன செய்வது என்பதே பலருக்கும் பிரச்னையாக இருக்கிறது.

உண்மையைக் கூற வேண்டுமானால் இன்றைய இளம் பெண்கள் பலர், புடவை கட்டுவதை விட சுடிதார் அணிவதையே விரும்புகின்றனர்.

அந்த கால அம்மாக்கள்.. தங்கள் பட்டுப் புடவைகளை குழந்தைக்கு பாவாடையாகவும், ஜாக்கெட்டாகவும் மாற்றி அணிவிப்பர்.

Advertisement

இன்று இந்தப் பட்டுப் புடவைகளை சல்வார் கமிஸ் , லெகெங்கா , துப்பட்டாவாகவும். ஆண்களுக்கு குர்தா எனப் பலவகையில் புதுப்பித்து தருகின்றனர். அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் லதா புட்டண்ணா எக்ஸ்பர்ட். 28ஆண்டுகளாக ஆடை வடிவமைப்பில் முன் நிற்கிறார்.

இது இப்படியென்றால்.. மேலும், சில வடிவமைப்பாளர்கள், புடவையின் பார்டரையே மாற்றி, புதுபார்டர் பொருத்தி, பழைய புடவையை, புது புடவையாக்கி விடுகின்றனர். மேலும் சிலர் இவற்றை கஃப்தான்களாக மாற்றிவிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.