மகளிர்மணி

மொச்சை  சப்ஜி 

லோ. சித்ரா


தேவையானவை:

மொச்சைப் பயறு - 1கிண்ணம்
சாம்பார் வெங்காயம் உரித்தது - அரை கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
கசகசா - 2 தேக்கரண்டி
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:

தேங்காய்த் துருவலில் பாதி, கசகசா இரண்டையும், விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் மீதமுள்ள தேங்காய்த்துருவல், சுட்ட வெங்காயம் சேர்த்து வறுத்த பின் அரைக்கவும். மொச்சைப் பயிறை வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோலை உரித்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் மொச்சைப் பயிறு சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்து சுட்ட வெங்காயம் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து போதுமான தண்ணீர் விடவும். குக்கரை மூடி 1 வீசில் சத்தம் வரும்வரை விட்டு பின் 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து தேங்காய், கசகசா விழுதைச் சேர்த்து புளிக்கரைசல், உப்பு, தேவையானால் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாகக் கலந்து பச்சை வாசனைப் போகும்வரை வேக வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT