மகளிர்மணி

இணைய வழி  நடனப்பயிற்சிக்கு சான்றிதழ்!

பூா்ணிமா

பெங்களூருவில் நாட்டியம் சார்ந்த "இன்ஸ்டிடியூட் ஆஃப் கதக் அண்ட் கோரியோகிராபி (என் ஐ கே சி) பயிற்சி நிறுவனத்தில் நடன பயிற்சிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் இயக்குநர் மது நட்ராஜ், பிரபல நடனக் கலைஞர். இவர், டாக்டர் மாயா தேவியின் புதல்வியாவார்.

யுனெஸ்கோவின் "இந்தியன் சென்டர் ஆஃப் இண்டர்நேஷனல் தியேட்டர்ஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் ட்ரஸ்ட்டின்' வழிகாட்டுதலின் படி 1964 -ஆம் ஆண்டு டெல்லியில் பத்மபூஷண் கமலா சட்டோபாத்யாய் என்பவரால் துவங்கப்பட்ட நாட்டிய இன்ஸ்டிடியூட் ஆஃப் கதக் அண்ட் கோரியோகிராபி பயிற்சி நிறுவனம் டாக்டர் மாயா ராவ் மூலம் வடிவமைக்கப்பட்டது.

இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடன பயிற்சிப் பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.

1987-ஆம் ஆண்டு டாக்டர் மாயாதேவி இதன் கிளையை பெங்களூருவில் துவங்கி அதன் இயக்குநராக பொறுப்பேற்றார். தென்னிந்தியாவில் முதன்முதலாக கதக் நடனத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற சிறப்பைப் பெற்ற இவர், ஏழாண்டுகளுக்கு முன் காலமானார். என்ஐகேசி பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் அவரது மகள் மது நட்ராஜ். இப்போது இயக்குநராகவும் உள்ளார்.

இதன் பயிற்சிக் கிளை பெங்களூருவில் தொடங்கப்பட்டபோது, பெங்களூரு யூனிவர்சிடியில் கொரியோகிராபி ஒரு பயிற்சி பாடமாக இருந்தது. மூன்றாண்டு கால பயிற்சிக்குப் பிறகே சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையை மாற்ற நினைத்த மது நட்ராஜ், அரசு அங்கீகாரம் பெற்று என்ஐகேசியில் ஓராண்டு பயிற்சிப் பெற்றாலே சான்றிதழ் பெறலாம் என்ற மாற்றத்தை அறிமுகப்படுத்தினார். ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் சேரத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் மது நட்ராஜின் நடனப்பயிற்சி நிறுவனத்தையும் பாதித்தது. பயிற்சி பெறும் மாணவர் நேரில் வர வாய்ப்பில்லாததால் பயிற்சியளிப்பது முடங்கியது. மதுநட்ராஜ் உடனடியாக இணையவழி மூலம் நடனப் பயிற்சியளித்து சான்றிதழ் வழங்க முடிவு செய்தார்.

"இணையவழி மூலம் நடனப் பயிற்சியளிக்கும் முறையை முதன்முதலாக துவக்கிய சிறப்பைப் பெற்ற என்ஐகேசி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஓராண்டிற்குள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறும் வகையில் நடனங்களில் மாற்றம் செய்தேன். கூடவே நடன பயிற்சி மட்டுமின்றி கோரியோகிராபி உருவான வரலாறு, ஒளியமைப்பு, இசையமைப்பு, காஸ்ட்யூம் டிசைன், போன்றவை குறித்தும் விளக்கமளிக்கிறோம். இன்றைய நடைமுறைக்கேற்ப புவி வெப்பமடைதல், வரதட்சணைக் கொடுமை, பெண்கள் முன்னேற்றம் போன்ற பிரச்னைகளையும் நடனம் மூலம் வடிவமைத்துள்ளோம்.

பொது முடக்கம் காரணமாக எங்கள் நடன நிகழ்ச்சிகள் இணையவழி மூலம் நடத்தப்படுவதால் பிறநாடுகளில் உள்ள மாணவர்கள் கூட எங்களிடம் நடனப்பயிற்சி பெற ஆவலுடன் உறுப்பினர்களாகி உள்ளனர். இணையவழி மூலம் மேலும் பிரபலமடைந்துள்ளது பெருமையாக இருக்கிறது'' என்கிறார் மதுநட்ராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT