மகளிர்மணி

திருமணத்தை மறுத்தவர்!

ரிஷி

கர்நாடகாவின், தாவணகெரே மாவட்டத்தில் சாலை வசதி சரியில்லாததால், மாணவர்கள் தினமும் 14 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் பல பெண் குழந்தைகள் தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்திவிடும் நிலை உள்ளது.

இதனை நினைத்து மனம் உடைந்த 26-வயதான பிந்து எனும் பெண், தங்களது ஊருக்கு சாலை வசதி அமைத்துக் கொடுக்கும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏனென்றால், தானும் திருமணமாகி சென்றுவிட்டால் தங்களது ஊருக்காகவும், மக்களுக்காக குரல் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள் என்று இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று அவருக்கு உறுதியளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT