மகளிர்மணி

பிரண்டைத் துவையல் 

பிரண்டையை நன்கு  சுத்தம் செய்து அதன் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

கவிதா பாலாஜி

தேவையானவை:

பிரண்டை - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
வரமிளகாய் - 10 
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பற்கள்
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:  

பிரண்டையை நன்கு  சுத்தம் செய்து அதன் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். பின் வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் பிரண்டையின் தண்டுப்பகுதிகளைப் போட்டு நன்கு நிறம் மாறி பச்சை வாசனைப் போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.  பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும்,  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக தேங்காயை துருவி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் வதக்கிய பிரண்டையுடன் , புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டைத்  துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்த வெள்ளி! கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சம்!!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டம்!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

SCROLL FOR NEXT