மகளிர்மணி

வெண்டைக்காய்  டிலைட் 

வெண்டைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொல்ளவும். வெங்காயம், தக்காளி காப்சிகம் இவைகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

ராதிகா அழகப்பன்

தேவையானவை

வெண்டைக்காய் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 3
காப்சிகம் - 1
தனியாதூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிய அளவு
பூண்டு, இஞ்சி விழுது - தலா 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை:

வெண்டைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொல்ளவும். வெங்காயம், தக்காளி காப்சிகம் இவைகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும். பின்னர், போதிய அளவு நீர் விட்டு, அத்துடன் தேவையான மாசாலா தூள்களை கரம் மசாலா, பூண்டு இஞ்சி விழுது உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொதிக்க விடவும்.

கலவை நன்கு வெந்து, நீர் முழுவதும் சுண்டி கமகம வாசனை வந்ததும், வெண்ணெய்யை சேர்த்து நன்கு கிளறி கொடுத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். இத்துடன் நறுக்கிய கொத்துமல்லியை தூளி இறக்கவும். வெண்டைக்காய் டிலைட் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT