முகப்பு
மகளிர்மணி

வெண்டைக்காய் பச்சடி 

வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய்த்துருவல், மிளகாய், சீரகம், மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் இவைகளை வைத்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

தேவையானவை:

வெண்டைக்காய் - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
புளி கரைசல் - கால் கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை:

வெண்டைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய்த்துருவல், மிளகாய், சீரகம், மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் இவைகளை வைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் வெண்டைக்காயை இட்டு, போதியளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். அரைப்பதம் வெந்ததும் மசாலா விழுது, புளி கரைசல், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தொடர்ந்து வேக வைக்கவும். கலவை நன்கு வெந்து வாசனை வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். வெண்டைக்காய் பச்சடி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.