மகளிர்மணி

வெண்டைக்காய்  சாதம் 

பாசுமதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். ( உதிரியாக இருக்க வேண்டும்). தக்காளி, வெண்டைக்காய், கேரட் மூன்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ராதிகா அழகப்பன்


தேவையானவை:

வெண்டைக்காய் - 150 கிராம்
பாசுமதி அரிசி - கால் கிலோ
கேரட் - 2
தக்காளி - 3
பூண்டு, இஞ்சி விழுது - தலா 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 6
பட்டை, சோம்பு - சிறிது
கொத்துமல்லி - சிறிதளவு


செய்முறை:

பாசுமதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். ( உதிரியாக இருக்க வேண்டும்). தக்காளி, வெண்டைக்காய், கேரட் மூன்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரி பருப்பை சிறுதுண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும். வாணலியில் சிறிது நெய்யை ஊற்றி, பட்டை, சோம்பை இட்டு வறுக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, வெண்டைக்காய், கேரட், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, போதிய அளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து காய் கலவை நன்கு வெந்து, நீர் முக்கால் அளவு சுண்டியதும். கடுகு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இத்துடன் உதிரியான சாதத்தைச் சேர்த்து, மீதமுள்ள நெய், வறுத்த முந்திரிபருப்பு, கொத்துமல்லி இவைகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT